Latest News

June 08, 2015

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு-விஜேதாச ராஜபக்ச
by Unknown - 0

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யுமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் பொருத்தமற்றவை என தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச குற்றம்சாட்டு சுமத்தப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களும்,அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களும்,மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதிதருணங்களில் கைதுசெய்யப்பட்ட, அல்லது சரணடைந்த ஆயிரக்கணக்கான விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்,அல்லது நீதிமன்றம் ஊடாக விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆரசியல் கைதிகள் விவகாரம் குறித்து தான் தமிழ்தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை எனவும் குறிப்பிட்டுள்ள அவர்,இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் தற்போதைய நிலை குறித்து மத தலைவர்களுக்கு சமீபத்தில் விளக்கமளித்தேன்.

குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிடுவோரிற்கு மததலைவர்கள் ஆலோசனை வழங்கவேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகள்  நல்லெண்ண நடவடிக்கைகளை பாதிக்கலாம். ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் அரசாங்கம் தடுத்து வைக்கப்பபட்டுள்ளவர்களின் விபரங்களை புதிய அரசாங்கம் சேகரித்தது.

இதனடிப்படையில் பயங்கரவாத குற்றச்செயல்களுக்கான தண்டிக்கப்பட்ட 54 பேர் தண்டனையை அனுபவிக்கின்றனர்.85 பேரிற்கு எதிராக குற்றப்பத்திரங்கள் தயாராகியுள்ளன,134 பேரின் வழக்குகள் நடைபெறுகின்றன, யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் இரகசிய வதைமுகாம்கள் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு,எனவும் அவர் தெரிவித்துள்ளார்
« PREV
NEXT »

No comments