இன்று உலக இசைத்தினம் 21
இசையின் வரலாறும் அதன் முன்னேற்றமும்
இந்தியாவின் சமூக அமைப்பு காலத்தின் போக்கில் படிப்படியாக உருவானதாகும் இந்திய மக்களின் இன்றைய வாழ்க்கை முறை என்பது பழங்காலம் தொடங்கி இன்றுவரை பிற இனத்தைச்சேர்ந்தவர்களின் படையெடுப்பு உள்ளிட்டவற்றுடன் இனைந்து ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகும் மதம் இசை நுண்கலை ஆகிய மூன்றும் சமுதாயத்தை ஓன்றாக பிணைத்திருக்கும் வலிமையான நூலைப்போல் திகழ்கின்றன இவ்வாறாக இந்தியாவில் அனைத்து சமூகத்தினரின் வாழ்க்கையும் எல்லாக்காலங்களிலும் இசை நிறைந்த இனிமையானதாகவே உள்ளது இது காலங்களை கடந்து மகிழ்ச்சியடைக்கூடிய பாரம்பரியமாக உள்ளது
இந்திய இசையின் வரலாறு என்பது 2வது நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நாட்டிய சாஸ்திரத்தில் தொடங்கி 5வது நூற்றாண்டில் உருவாக்கபட்ட பிரகதேசி (இந்தக்காலத்தில் தான் இராகம் என்ற சொல் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது) 13ஆவது நூற்றாண்டில் சங்கீத ரத்னா பின்னர் 16மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்ட இசை ஆய்வக்கட்டுரைகளான சதுர்தண்டி பிரகாசிகா இராகவிபோதா வரை பல நூற்றாண்டு கால இசை மேம்பாடுகளை உள்ளடக்கியதாகும்
குரல்.துத்தம் கைக்கிளை உழல் இளி. ஷளரி.தாரம் போன்ற ஸ்வரங்களை வாசிக்க யாழ் என்ற பழங்கால இசைக்கருவி பயன்படுத்தப்பட்டது இசை என்பது மதம் கலை கலாச்சாரம் ஆகியவற்றுடன் பின்னி பிணைந்ததாகும் கோயில்கள் கலைகளின் மையங்களாக விளங்கின கோயில்களில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளிலும் காற்றை இசையாக மாற்றும் நாதஸ்வரம் இசைக்கப்படுவது வழக்கம்
இசைக்கலையை அறிந்தவர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் இசையைக்கேட்க விரும்புவார்கள் இசையை வளர்ப்பதற்காக சபாக்களும் மற்ற அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன இசை நிகழ்ச்சி நடக்கும் ஓர் அரங்கு எத்தகைய பரிணாமம் கொண்டதாக இருக்கவேண்டும் பல வகையான மெல்லிசை பாடல்களை எந்தெந்த தருணங்களில் இசைப்பது என்பது போன்ற நுணுக்கமான விவரங்கள் சிலப்பதிகாரத்தில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன்
தென்னிந்தியா வெளிநாட்டு படையெடுப்புகளால் பாதிக்கப்படாமல் இருந்ததால் நுண்கலைகளை வளர்க்கவும் மேம்படுத்தவும் அதிக நேரத்தை செலவிட முடிந்தது தென்னிந்திய மன்னர்களில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் மைசூரை ஆண்ட உடையார்கள் திருவிதாங்கூர் மன்னர்கள் போன்றவர்கள் தேர்ச்சி பெற்ற இசைக்கலைஞர்களாக திகழ்ந்தனர் இராமநாதபுரம் மன்னர் போன்ற குறுநில மன்னர்கள் இசை மற்றும் இசைக்கலைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றினார்கள்
கலைஞர்கள் ஓரு நாட்டிலிருந்து இன்னொறு நாட்டிற்குச்சென்று தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்துவதுடன் அங்குள்ளவர்களுக்கும் கற்றுக்கொடுப்பார்கள் ஓரு காலக்கட்டத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்ததால் இசைக்கு ஆதரவு தருவதற்கு யாருமே இல்லாத நிலை ஏற்பட்டது அதன்பிறகு தர்பார்களுக்குப்பதில்; ஜனநாயக அமைப்பு முறையில் இசையை வளர்ப்பதற்காக சபாக்களும் மற்ற அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன
பல நூற்றாண்டுகளாக ஒரே வகையாக இருந்த பாரம்பரிய இசை கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவுக்கு இந்துஸ்தானி இசை தென்னிந்தியாவுக்கு கர்நாடக இசை என்று இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டது அடிப்படையில் இரு இசை வடிவங்களுமே மெல்லிசை பாடல் வடிவத்தையும் ராகத்தின் அடிப்படையிலும் தான் பின்பற்றுகின்றன இசை குறிப்புகளை கையாளுவது மொழி ராகங்களை கையாளுவது ஆகியவற்றில் தான் இரு இசை வடிவங்களுக்கும் வேறுபாடு உள்ளது
கலையும் கலாச்சாரமும் அனைத்து எல்லைகளையும் கடந்தவை என்றால் தென்னிந்திய இசையோ அதைவிட ஒரு படி மேலே சென்று சமுதாயத்தில் தனக்கென ஓர் இடத்தையும் அடையாளத்தையும் தேடிக்கொண்டது இன்று தமிழ்நாடு ஆந்திரப்பிரதேசம் கர்நாடகம் கேரளா என்று அழைக்கப்படும் மாநிலங்கள் அனைத்தையும் ஒன்றாக பிணைக்கும் வகையில் கலாச்சார ஒற்றுமை ஒரு காலத்தில் இருந்தது இந்தப்பகுதியில் பல பாரம்பரியங்கள் ஒரே மாதிரியாகவே இருப்பதை காணமுடியும் பூகோள அடிப்படையிலும் இந்தப்பகுதி தீப கற்ப இந்தியா என்ற ஒற்றை பகுதியாகவே விளங்கியது
இப்பகுதியில் சமஸ்கிருதம் என்பது இசையின் மொழியாகவும் தெலுங்கு அறிஞர்களின் மொழியாகவும் திகழ்ந்தது பின்னர் தமிழ் கன்னடம் ஆகிய மொழிகளும் இசை குறிப்புகளில் சேர்க்கப்பட்டு இந்த மொழிகளிலும் இசைக்குறிப்புகள் வெளியாகின தொல்காப்பியர் காலத்தில் இருந்தே இசை நடனத்தை வளர்த்த பெருமைகள் தமிழர்களுக்கு உண்டு
நன்றி பொ.ஜெயச்சந்திரன்
திருவரங்குளம் அலைபேசி 9751239014
No comments
Post a Comment