Latest News

June 03, 2015

வித்தியாவின் படுகொலையை கண்டித்து பருத்தித்துறையில் போராட்டம்!
by admin - 0

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் அதற்கு நீதி வழங்கக் கோரியும் பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை அமைதிப் போராட்டம் இடம்பெற்றது.  காலை 9.30 மணியளவில் பருத்தித்துறை காந்தி சிலையடியில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி கொட்டடி சித்திவிநாயகர் ஆலயத்தைச் சென்றடைந்தது.  அங்கு வைத்து நகர சபைத் தலைவர் சபா ரவீந்திரனால் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி, வடமாகாண பொலிஸ் மா அதிபர், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கான மகஜர்கள் பொலிஸ் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.  இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களாக சுகிர்தன், சிவயோகன் மற்றும் நகர சபைத் தலைவர், உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதேவேளை பருத்தித்துறையில் இன்று கடையடைப்பும்
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் அதற்கு நீதி வழங்கக் கோரியும் பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை அமைதிப் போராட்டம் இடம்பெற்றது.
காலை 9.30 மணியளவில் பருத்தித்துறை காந்தி சிலையடியில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி கொட்டடி சித்திவிநாயகர் ஆலயத்தைச் சென்றடைந்தது.
அங்கு வைத்து நகர சபைத் தலைவர் சபா ரவீந்திரனால் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி, வடமாகாண பொலிஸ் மா அதிபர், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கான மகஜர்கள் பொலிஸ் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களாக சுகிர்தன், சிவயோகன் மற்றும் நகர சபைத் தலைவர், உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதேவேளை பருத்தித்துறையில் இன்று கடையடைப்பும் 

« PREV
NEXT »

No comments