தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள தாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
டயஸ்போராக்களுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட போதும் அதன் சர்வதேச வலையமைப்பு இயங்கி வருவதோடு பணமும் திரட்டப்படுகிறது. எமது நாட்டின் மீதான அச்சுறுத்தல் இன்னும் தணியவில்லை. இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தல் காணப்படுகிறது. இந்த அச்சுறுத்தலில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து மக்கள் அவதானமாக உள்ளனர். எமது அரசாங்கம் புலிகள் மீண்டும் தலை தூக்க இடமளிக்கவில்லை. தேசிய பாதுகாப்பிற்கு முன்னிரிமை வழங்கினோம் என தெரிவித்துள்ளார் நிமல் சிறிபால சி சில்வா.
No comments
Post a Comment