வேறொரு நபரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி சைப்ரஸ் நாட்டுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.
நாடு கடத்தப்பட்ட அவரை கட்டுநாயக்க விமானத்தின் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் கல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்தவர் என விமான நிலைய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கடந்த 5 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சைப்ரஸ் விமான நிலையத்தில் சந்தேக நபரின் கடவுச்சீட்டை அதிகாரிகள் பரிசோதித்த போது அது மற்றுமொரு நபரின் கடவுச்சீட்டு என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் நபரை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை செலுத்தி முகவர் ஒருவரிடம் இருந்து இந்த கடவுச்சீட்டை பெற்றுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment