ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டபோதிலும் இராணுவ ஆட்சிக்குள்ளேயே தமிழ் மக்கள் வாழ்கின்றனர் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
எந்த குடிமகனின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதோ அது உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என நூறு நாள் வேலைத்திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தும் அது பூரணமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறான நிலங்களை விடுவிப்பதில் இராணுவம் தடையாக செயற்படுகின்றது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
நேற்று அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனநாயக சூழலை உருவாக்கி, இராணுவ சூழலை அகற்றி, எங்களது இனப்பிரச்சினை, நிலப்பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வுகாணவேண்டும் எனும் நோக்கிலேயே எமது மக்கள் ஒட்டுமொத்தமாக வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இருந்த போதிலும் அவற்றிற்கான முழுமையான தீர்வு இதுவரையில் எட்டப்படவில்லை.
No comments
Post a Comment