Latest News

June 29, 2015

சுதந்திரக்கட்சிக்குள் வலுவடையும் பிளவு. மகிந்த பக்கம் அதிகமானவர்கள் இணையக்கூடும் என உள்வட்டாரங்கள் கவலை.
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்,Mahindha
பாராளுமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும் முகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நீண்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.

ஸ்ரீல. சு.க வின் கீழ் முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவது பற்றி இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. எனினும் இது தொடர்பில் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாக ஸ்ரீ ல. சு. க வின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

“எதிர்வரும் வாரங்களில் நாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து பங்காளர்களுடனும் பேச்சு நடத்துவோம், அதன் பின்னர் நாம் வேட்புமனு தெரிவுக் குழுவொன்றை நியமிப்போம். வேட்பாளர்கள் தெரிவின்போது எந்தவொரு குழுவையும் நாம் ஒதுக்கிவைக்கப்போவதில்லை.

இயலுமானவரை கட்சிக்குள் பிளவு ஏற்படுவதனைத் தவிர்த்து ஒரே கட்சியாக போட்டியிடுவதற்கே நாம் முயற்சிக்கின்றோம்” என்றும் திஸாநாயக்க கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சி தலைவரென்ற வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவாரென்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இதற்கான இணக் கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரசாரம் குறித்து எவரும் கேள்வி எழுப்பப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறானபோதும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது நெருங்கிய சகாக்களுக்கும் வேட்புமனு வழங்கப்படக் கூடாது என்பதில், கட்சியின் உயர் செல்வாக்குடைய நபரென்றவகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உறுதியாகவுள்ளார்.

சுசில் மஹிந்த அணியில் இணைவு

ஐ.ம. சு. மு. வின் செயலாளர் நாயகம் சுசில் பிரேமஜயந்த மிஹிந்த ஆதரவு அணியுடன் இணைந்து கொள்ளவிருப்ப தாகத் தெரியவருகிறது.

இத்தீர்மானமானது மஹிந்த குழுவினர் பக்கத்துக்கு பெரும் எண்ணிக்கையானவர்களைக் கொண்டு செல்வதற்கு உந்துசக்தியாக அமைந்துவிடும் என கட்சி உள்வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த ஐ. ம. சு. மு. செயலாளர் நாயகம் அமெரிக்காவில் உள்ளார். அவர் இன்றைய தினம் நாடு திரும்பவிருப்பதாகவும், நாடு திரும்பும் அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பிரசாரங்களில் கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் வேட்பாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் விடாப்பிடியாகக் கூறிவரும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் மஹிந்தவுக்கு வேட்புரிமை வழங்கும் விடயத்தில் பிரிந்து காணப்படுகிறது. இந்த நிலையிலேயே சுசில் பிரேம் ஜயந்தவின் இந்த நடவடிக்கை அமையவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

கட்சியின் பிரதமர் வேட்பாளர் மஹிந்தவா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும் என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் டபிள்யூ. டி. ஜே. செனவிரட்ன தெரிவித்தார். இது தொடர்பான தீர்மானத்தைக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவே எடுக்க வேண்டும் என மஹிந்தவையும் மைத்திரியையும் இணைக்கும் குழுவிற்கு தலைமை தாங்கும் முன்னாள் அமைச்சர் செனவிரட்ன கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற எக்குழுவு டனான சந்திப்பில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் கட்சி பிளவுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டதுடன், கட்சியைப் பிளவுறச் செய்வதற்கு தான் ஒருபோதும் செயற்படப் போவதில்லை என்று அவர் கூறியதாகவும் அதில் கலந்துகொண்ட ஒருவர் கூறியுள்ளார். வேட்பாளராக தன்னை நியமித்தால் ஐ. ம. சு. மு.வின் வெற்றிக்கு அர்ப் பணிப்புடன் செயற்படத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூறியி ருப்பதாகவும் தகவல்கள் வெளியா கியுள்ளன.

அதேநேரம், மஹிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆறுபேர் கொண்ட குழு இன்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவுடன் இறுதிச்சுற்றுப் பெச்சுவார்ததையில் கலந்து கொள்ளவிருப்பதாக ஜோன் செனவிரட்ன கூறினார்.
« PREV
NEXT »

No comments