அவுஸ்திரேலிய குடியுரிமை உட்பட இரட்டை குடியுரிமை பெற்றிருக்கும் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபாடு போது அவரது அவுஸ்திரேலிய குடியுரிமையை பறிக்கும் புதிய சட்டம் இவ்வாரம் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்படவுள்ளது.
இப்புதிய சட்டம் குறித்து வாத பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சட்ட வரைவானது நீதிமன்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் பலரும் பல விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இச் சட்டம் குறித்து வெளியில் பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அமைச்சரவைக்குள்ளும் பல எதிர்ப்பு வருவதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளதாக தெரியவருகின்றது.
மற்றைய நாடுகளில் இயங்கும் பயங்கரவாத குழுக்களுக்காக சண்டையிடும் அவுஸ்ரேலியர்களை கையாளும் முறையில் விரிவாக்குவதர்க்கு தற்போது உள்ள அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவளிப்பதாகவும், ஆனால் பயங்கரவாத குற்றம் நிருபிக்கப்படாத ஒரு தனி நபர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அமைச்சருக்கு வழங்குவது ஏற்புடையது அல்ல என்று எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பானது பலர் மத்தியிலும் பாரிய விமர்சனத்தையும் எதிர்ப்பையும் அபொட் அரசாங்கம் எதிர்ெநோக்கியுள்ளமை குறிப்பிடததக்கது.
No comments
Post a Comment