Latest News

June 27, 2015

யாழ்ப்பாண மாணவர்கள் 22 பேருக்கு HIV
by admin - 0

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 மாணவர்களுக்கு எயிட்ஸ் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் 45 மாணவர்களுக்கு எயிட்ஸ் நோயின் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

மொத்தமாக சுமார் 118 பேருக்கு இன் நோய் இருப்பது கண்டறியப்பட்டாலும், மாணவர்களுக்கு மத்தியில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு இன்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது என்கிறார்கள் இலங்கை அதிகாரிகள்.

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சொல்லவே தேவையில்லை. 22 மாணவர்களுக்கு எயிட்ஸ் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சிங்களப் பகுதிகளை பொறுத்தவரை , கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்ட என்று பல மாகாணங்களில் உள்ள  லட்சக்கணக்கான மக்களில் 23 மாணவர்களுக்கு இன் நோய் தொற்றியுள்ளது.

ஆனால் யாழ் மாவட்டம் என்பது ஒரு சிறிய பகுதியாகும். இங்கே எயிட்ஸ் நோயின் தாக்கம் இவ்வாறு அதிகரித்துச் செல்வது தமிழர்களை மேலும் ஒரு அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும். அதுபோக மாணவர்கள் மத்தியில் இன்நோய் பரவ ஆரம்பித்துள்ளமை பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. காரணம் இது விரைவாக பரவும் வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும், திட்டங்களை அரசாங்கம் அறிவிக்க உள்ளது என்று கூறப்படுகிறது.
 
இருப்பினும் வட மாகாண சபை இது தொடர்பாக கவனத்தில் எடுப்பது நல்லது. வடமாகாண சபை யாழில் எயிட்ஸ் நோயினை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கையில் இறங்காவிட்டால், பெரும் அழிவினை நாம் சந்திக்க நேரிடலாம்.
« PREV
NEXT »

No comments