ஶ்ரீலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்ட யுத்தத்தில் நடைபெற்ற போர்க் குற்றங்களுடன் தொடர்புடையவராக கூறப்படும் முன்னாள் கட்டளை அதிகாரி ஜகத் டயஸ் இராணுவ பிரதானியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யுத்தத்தின் இறுதி கட்டத்தில் அதாவது 2006 இருந்து 2009 வரை 57 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக இவர் செயற்பட்டார்.
பின்னர் ஜேர்மனுக்கான இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றிய இவர் தற்போது முல்லைத்தீவு மாவட்ட படைத் தளபதியாக பணியாற்றினார். இந்த நிலையில் டயஸ் இலங்கை இராணுவத்தின் 49 ஆவது இராணுவ பிரதானியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
No comments
Post a Comment