தமிழரசுக்கட்சியின் துணைதலைவர் பேராசிரியர் க.சிற்றம்பலத்தினால் எழுதப்பட்ட தடம் பதித்த தமிழ் தேசியம் நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றிய இளைஞரணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் மேலும் தெரிவிக்கையினில் இலங்கையில் இருந்த ஜனாதிபதிகளுள் கூடிய அளவு இராணுவ நடடிக்கைகளினை மேற்கொண்டு சாதனை புரிந்தவர் சந்திரிகாவே.செம்மணி படுகொலை, நவாலி தேவாலயப்படுகொலை, கிளிநொச்சி, மாங்குளம் என அவர் அரங்கேற்றிய படுகொலைகள் கொஞ்சநஞ்சமல்ல.
பனங்காயினில் உடுப்பு தோய்க்கவும் குளிக்கவும் வைத்தவர் இந்த அம்மணிதான்.அதனை தமிழரசுக்கட்சியினுள் வழிப்போக்கர்களாகவும் பின்கதவு வழியாகவும் வந்தவர்கள் அறிந்திருக்கப்போவதில்லை. அவர்கள் தமிழ் தேசியம் 30 வருட கால அகிம்சை மற்றும் ஆயுதப்போராட்டங்களினில் இழந்தவைகள்,தியாகங்கள் பற்றி அறிந்து கொள்ள இப்புத்தகத்தை அவர்களிற்கு சமர்ப்பிக்கின்றோமென தெரிவித்தார்.
அதே போன்றே ரணில் விக்கிரமசிங்கவும் சாதாரணமானவரொருவர் அல்ல.விடுதலைப்புலிகளை பிளந்து முள்ளிவாய்க்காலில் கொண்டு வந்து அனைத்தையும் முடித்து வைக்க காரணமானவர்.
இப்போது எமது தலைவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி ரணில் -சந்திரிகாவை ஆட்சிக்கொண்டு வந்து தேனிலவு கொண்டாடுகின்றார்கள்.
எங்கள் மக்கள் கடுமையான கோபத்துடன் இருக்கிறார்கள். தலைவர்களை கடுமையாக விமர்சிக்கின்றனர்.கேள்வி கேட்கின்றனர் .ஆனால் மக்களை சந்திக்காத தலைவர்கள் எமது தலையெழுத்தை தீர்மானிக்கின்றார்கள்.சந்திரிகாவிற்கு அரசியல் வாழ்வு கொடுக்க இப்போது பாடுபடுகின்றார்கள் என தெரிவித்தார்.
அவரது உரையினை ஆமோதிக்கும் வகையினில் பலத்த கரகோசம் பார்வையாளர்களிடையெ எழுப்பப்பட்டது. பேராசிரியர் க.சிற்றம்பலத்தினால் எழுதப்பட்ட தடம் பதித்த தமிழ் தேசியம் நூலை தந்தை செல்வா ஞாபகார்த்த அமைப்பின் தலைவர் ஆயர் ஜெபநேசன் அடிகளார் வெளியிட்டு வைக்க யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் பெற்றுக்கொண்டார்.
யாழ்.வீரசிங்கம் மாநாட்டு மண்டபத்தினில் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
நிகழ்வினில் தமிழரசுக்கட்சி செயலாளர் பொன்.துரைராஜசிங்கம் தந்தை செல்வா ஞாபகார்த்த அமைப்பின் தலைவர் ஆயர் ஜெபநேசன் அடிகளார் வாழ்த்துரைகளை வழங்கியிருந்தனர்.
No comments
Post a Comment