இளைய தளபதி விஜய் எப்போது தன் வேலையில் மட்டுமே கவனமாக இருப்பார். இந்நிலையில் இவரின் மீது திரைப்பிரபலங்கள் பலரும் வைக்கும் குறும்பு குற்றாச்சாட்டு, விஜய் எப்போதும் மௌனமாகவே இருக்கின்றார், யாரிடமும் பேச மாட்டார் என்பதே.
இந்நிலையில் சமீப காலமாக விஜய்யிடம் பல மாற்றங்கள் வந்துள்ளதாம். படப்பிடிப்பிற்குள் வந்தால் முதலில் லைட் மேனில் ஆரம்பித்து அனைத்து உதவி இயக்குனர்கள் வரை கை கொடுத்து சிரித்து பேசிவிட்டு தான் அடுத்த வேலைக்கே செல்கிறாராம்.
மேலும், படப்பிடிப்பில் தற்போதெல்லாம் எல்லோரிடத்திலும் ஜாலியாக பேசி, கலகலப்பாக இருக்கிறாராம். எப்படி இந்த திடீர் மாற்றம் என அனைவரும் வியப்புடன் பார்க்கிறார்களாம்.
No comments
Post a Comment