சென்னை: கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி மே 11ம் தேதி 11 மணிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க இருக்கிறார். இவ்வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அனைத்து தரப்பினரும், தீர்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
ஜெயலலிதாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடிய தீர்ப்பு என்பதால் அதிமுகவினர் அனைவரும் திக்.திக். மனநிலையில் இருக்கின்றனர். ஜெயலலிதாவின் விடுதைலைக்காக செப்டம்பர் 27ஆம் தேதி முதல் தொடங்கிய வேண்டுதல்களும் பிராத்தனைகளும் தீவிரமடைந்துள்ளது.
தலையெழுத்தை மாற்றிய அந்த 66 கோடி வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது, வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.வழக்கை விசாரித்த, பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா, குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உட்பட நால்வருக்கும்,கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். அபராதமாக ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாயும், மற்ற மூவருக்கும், தலா, 10 கோடி ரூபாயும் விதித்தார்.
ஜாமீனில் விடுவிப்பு
குற்றவாளிகள் நால்வரும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அக்டோபர் 18ஆம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஜெயலலிதா உள்ளிட்ட, நால்வரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்களை விசாரித்த நீதிபதி
தள்ளிப்போன தீர்ப்பு
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானதற்கு எதிராக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மனு தாக்கல் செய்யவே, ஜெ. அப்பீல் வழக்கு தீர்ப்பு தள்ளிப்போனது. இதனிடையே மே, 12ஆம் தேதிக்குள், இவ்வழக்கில் தீர்ப்பு வழங்க, உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. அதன்படி, நாளை, 11ம் தேதி, 11 மணிக்கு நீதிபதி குமாரசாமி, மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்குகிறார்.
தலையெழுத்து நிர்ணயம்
இந்த தீர்ப்பு, ஜெயலலிதாவின் எதிர்கால அரசியலுக்கான தலையெழுத்தை நிர்ணயிக்கப் போவதாக இருக்கும் என்கின்றனர், அரசியல் பார்வையாளர்கள். ஊழல் வழக்கில், குறைந்தபட்சம் ஓராண்டு முதல், ஏழாண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்க, சட்டத்தில் இடம் உள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்தது. பொதுவாக, மேல்முறையீட்டு வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றால், விடுதலையாவர்.
என்னவாகும் தீர்ப்பு?
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை, உயர் நீதிமன்றம் உறுதி செய்யும். அபராதம், சிறை தண்டனை அதிகபட்சம் என, உயர் நீதிமன்றம் கருதினால், தண்டனையையும், அபராதத்தையும் குறைக்கலாம்.
சரணடைய உத்தரவிடப்படும்
தண்டனை உறுதி செய்யப்பட்டாலோ, குறைக்கப்பட்டாலோ, குறிப்பிட்ட நாட்களுக்குள், தனி நீதிமன்றத்தில் சரணடையும்படி, குற்றவாளிகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிடும். உயர் நீதிமன்றம் குறிப்பிடும் நாட்களுக்குள், குற்றவாளிகள் சரணடைந்து, சிறைக்கு செல்ல வேண்டும். பின், உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்து, ஜாமீனில் வெளி வர வேண்டும்.
என்னென்ன சிக்கல்கள்
ஊழல் வழக்கில் ஒருவருக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டால் கூட, அவர், தேர்தலில் போட்டியிடும் தகுதியை, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு இழக்கிறார். வெறும் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டால், அபராதத் தொகையை செலுத்திய நாளில் இருந்து, ஆறு ஆண்டுகள் வரை, தேர்தலில் போட்டியிட முடியாது. ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டால் கூட சிறை தண்டனையை அனுபவித்த பின், ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
மே 11ம் தேதி 11 மணி இந்திய அரசியலில், முதன் முதலாக, முதல்வராக பதவி வகிக்கும் போது, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டவர் என்பதால், இவ்வழக்கின் தீர்ப்பை, அரசியல் வட்டாரமே எதிர்பார்த்து உள்ளது. தீர்ப்பு நேரத்தில் நீதிமன்றத்துக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்பதால் ஜெயலலிதா பெங்களூரு செல்ல வேண்டி இருக்காது. தீர்ப்புக்குப் பிறகுதான் அவர் பெங்களூரு போக வேண்டுமா, இல்லையா என்பது தெரியவரும்.
அஷ்டமி திதி அவிட்டம் நட்சத்திரம்
தீர்ப்பு வெளியாகும் நாளான மே 11ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரம், அஷ்டமி திதியாக உள்ளது. 11 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படுவதால் அது சரியான எமகண்ட வேளையாகும். இது எதுவும் ஜெயலலிதாவை பாதித்து விடக்கூடாதே என்று அதற்கு வேறு சிறப்பு பூஜைகளை செய்யத் தொடங்கி விட்டனர் அதிமுகவினர்.
நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு
மே 11ஆம் தேதி ஜெயலலிதா ஜாதகப்படி சுக்கிரன் விரயத்தில் இருக்கிறாராம். ஒருவேளை சொத்துக்கள் பறிமுதலாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2ல் ராகு 8ல் கேது இருப்பதால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதாம். குருவும், சனியும் சாதகமற்ற நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் செவ்வாய் சரியான இடத்தில் பிரகாசமாக இருக்கிறாராம். செவ்வாய் காரகன் பெயராக நீதிபதி குமாரசாமி இருக்கிறார். இதனால் ஜெயலலிதாவிற்கு நன்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கின்றனர். அனுபவ ஜோதிடர்கள். இன்னும் ஒருநாள்தானே இருக்கிறது என்ன நடக்கப்போகிறதோ? பொறுத்திருந்து பார்க்கலாம்.
No comments
Post a Comment