ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமாகியுள்ள பல்மைரா நகரில் உள்ள மிக அரிதான பறவையினம் ஒன்று அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரியாவின் பாரம்பரிய நகரான பல்மைராவில் வசிக்கும் மிக அரிதான பறவையினம் ஒன்றே இவ்வாறு அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளதாக பறவைகள் பற்றிய ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நொதெர்ன் பால்ட் இபிஸ் என்ற கறுப்பு நிறமான இந்தப் பறவை நீண்டு வளைந்த அலகினைக் கொண்டது.
2002ஆம் ஆண்டில் இந்தப் பறவை பல்மைரா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டபோது, சிரியாவின் அரசாங்கம் அந்தப் பறவைகள் பெருகுவதற்கான பாதுகாப்பை வழங்கியிருந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment