Latest News

May 08, 2015

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல்; கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது , கட்சி பொறுப்பிலிருந்து எட் மிலிபாண்ட் விலகல்!
by Unknown - 0

வெளியான தேர்தல் முடிவுகளின்படி 330 ஆசனங்களை பெற்று ஆளும் கன்சர்வேடிவ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தொழில்கட்சி 232 ஆசனங்களைப் பெற்று இரண்டாம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தவிர ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி 56 ஆசனங்களைப் கைப்பற்றி மூன்றாம் இடத்தைப் பெறுள்ளது.  
தற்போதைய தேர்தல் முடிவுகளின் படி ஆளும் கொன்சவேட்டிவ் மற்றும் தொழில் கட்சிகளுக்கு இடையில் ஆசன எண்ணிக்கையில் வேறுபாடு சிறிதாக இருப்பினும் இறுதித் தேர்தல் முடிவுகளின் பின்னர் பெரும்பான்மை வாக்குகளால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று ஆட்டி அமைக்க இருக்கிறது.
தற்போதைய தகவலின்படி கமரூன் Buckingham Palace இல் இங்கிலாந்து அரசியுடன் குறுகிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார் .இதன் பின் அவர் ஊடகங்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமரூன்  இங்கிலாந்து அரசியுடன் சந்திப்பை முடித்துக்கொண்டு Buckingham Palace இல் இருந்து பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தை வந்தடைந்தார்.

23 ஆண்டுகளில் முதல் முறை தனித்து பெரும்பான்மை ஆசனங்களை கன்சர்வேடிவ் கட்சி பெற்று ஆட்சியை அமைக்கவுள்ளது.


« PREV
NEXT »

No comments