வெறும் 20 வயதேயான பல்கலைக் கழக மாணவி மாரி பிளாக், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு 1667 ஆம் ஆண்டுக்குப் பின் தேர்வான மிகவும் இளையவர் இவர்தான்.
கிறிஸ்டபர் மோனக் 13 வயதில் 1667 இல் நடைபெற்ற தேர்தலில் வென்று சாதனை படைத்தார். வயது குறைவான நாடாளுமன்ற உறுப்பினரை பேபி ஆப் தி ஹவுஸ் என்று அழைக்கும் பழக்கம் பிரிட்டனில் உள்ளது.
ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் சார்பில் களமிறங்கிய மாரி பிளாக், பெய்ஸ்லி மற்றும் ரென்பிருஷையர் தெற்கு தொகுதியில் தனக்கு எதிராகப் போட்டியிட்ட தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதான எதிர்கட்சியான லேபர் கட்சியின் நிழல் மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த மூத்த அரசில்வாதியுமான டக்ளஸ் அலெக்சாண்டரை தோற்கடித்தார்.
இவருக்கு 23,548 வாக்குகளும் டக்ளஸ் அலெக்சாண்டருக்கு 17,864 வாக்குகளும் கிடைத்துள்ளன. டக்ளஸ் அலெக்சாண்டர் அந்தத் தொகுதியிலிருந்து 1997 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளாக அந்தத் தொகுதி தொழிற் கட்சி வசம் இருக்கிறது.
No comments
Post a Comment