Latest News

May 15, 2015

சிறிலங்காவுக்கு எதிரான போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் கைவிட்டனரா ?நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதிலடி !
by Unknown - 0

ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிறிலங்கா அரசுக்கு எதிரான போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் கைவிட்டுவிட்டனர் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன கருத்துக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதிலுரைத்துள்ளது.

அதிபர் தேர்தலுக்குப் பின்னர், புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து சிறிலங்கா அழுத்தங்களை எதிர்கொள்ளவில்லை என்றும், முன்னர் போன்று ஐ.நாவுக்கு அருகிலும், ஏனைய இடங்களிலும், புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் நடத்தியதாக,செய்திகளை காண முடியவில்லை என்றும் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா அமைச்சரின் இக்கருத்துக்கு பதிலுரைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ், சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் சிறிலங்காவின் புதிய அரசுத் தலைவர் பிரித்தானியாவுக்கு வருகை தந்த போது, புலம்பெயர் தமிழர்கள் காட்டிய எதிர்ப்புஅனைவரும் அறிந்த ஒன்று.

தற்போது சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் ஐ.நா பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் பத்து இலட்சம் கையொப்பங்களை இடும் போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்ல தமிழக தமிழர்களும் பங்கெடுத்துள்ளனர்.

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை விசாரணைக்குழுவின் அறிக்கை சமர்பிக்கப்படும் செப்ரெம்பர் மாதப்பகுதியில் நியூ யோர்க் ஐ.நா பொதுச்சபைக்கு முன்னாலும் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபைக்கு முன்னாலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் யாவும் ஒன்றுபட்டு நடத்துகின்ற கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபட இருக்கின்தென அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டம் : www.tgte-icc.org

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் ஐ.நா மனித உரிமைச்சபை உரையின் பொய்மைத்தன்மையினை அம்பலப்படுத்தி, நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்ட பதிலறிக்கை : http://fr.calameo.com/read/000341502059c828e4110


« PREV
NEXT »

No comments