Latest News

May 13, 2015

இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள் இன்று -TGTE
by Unknown - 0

Transnational Government of Tamil Eelam
இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் வாரம் இன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய அலுவலகத்தில் நினைவுச் சுடரேற்றி ஆரம்பித்துவைக்கப்பட்டது .  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் இன்றில் இருந்து 18ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்திருந்தது .

இதன் முதற்கட்டமாக அகவணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச்சுடரினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் திரு திருக்குமரனும் அதனைத் தொடர்ந்து பொதுச் சுடரினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி அமைச்சர் முருகதாஸ் பாலாம்பிகை அவர்களும் ஏற்றி வைத்தனர்.  நினைவேந்தலில்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் உருத்திரகுமார் அவர்களின் skype மூலமான சிறப்புரையை தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களும் மற்றும் பலரும் உரையாற்றியிருந்தனர். மேலும் அதனைத் தொடர்ந்து கடைசி யுத்தத்தின் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இறுதி நிகழ்வாக ஸ்ரீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் பத்துலட்சம் கையெழுத்தினை திரட்டும் விண்ணப்பப்படிவமும் கையளிக்கப்பட்டது.
Vivasaayi
Vivasaayi,kavinthan

 
Transnational Government of Tamil Eelam
 



The Transnational Government of Tamil Eelam,tgte

« PREV
NEXT »

No comments