Latest News

May 22, 2015

ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது அரசவை அமர்வு தொடங்கியது!
by Unknown - 0

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது நேரடி அரசவை ஜேர்மனியில் கூடியிருக்கிறது.

நாடுகடந்தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது நேரடி அரசவை அமர்வாக இது அமைகிறது.

இந்த அமர்வு இன்று தொடக்கம் 23,24 ஆகிய மூன்று நாட்கள் ஜேர்மனியின் டோட்மூண்ட் பெருநகரில் இடம்பெற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Steigenberger Hotel ,Bersword Strasse 2,44139 Dortmund இடத்தில் இடம்பெறுகின்ற அமர்வின் முதன்நாள் இன்று  வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறுகின்ற தொடக்க நிகழ்விலும் மாலை 5 மணிக்கு இடம்பெறுகின்ற பொதுஅரங்கிலும் பொதுமக்கள் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தேங்களில் இருந்தும் நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் மற்றும் சமூக-அரசியற் வள அறிஞர்கள் என பலரும் இந்த அமர்வில் பங்கெடுத்திருக்கின்றனர்.

இம்மூன்று நாள் அமர்விலும் பொதுன வாக்கெடுப்பு, தமிழகம்- புலம் இடையிலான பன்முக தளத்திலான வளர்த்தெடுத்தல், என பல்வேறு விவகாரங்கள் குறித்தான விவாதங்கள், செயல்வடிவங்கள், தீர்மானங்கள் இடம்பெறவுள்ளதாக அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










Looking face ...
« PREV
NEXT »

No comments