மதுரை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள குமாரபுரம் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்பத் தகராறின் காரணமாக இந்தக் கொலைகள் நடந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஊரைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் பாண்டீஸ்வரி என்பவருக்கும் சமீபத்தில் முன்பு திருமணம் ஆனது, ஆனால், இந்தத் தம்பதியினர் பிரிந்தே வாழ்ந்துவந்தனர்.
பாண்டீஸ்வரியோடு வாழ முடியாது என கண்ணன் கூறிவந்த நிலையில், கண்ணன் அவரது பெற்றோர், சகோதரி மற்றும் சகோதரியின் குழந்தைகளோடு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலை இரண்டு மணி அளவில் அங்கு வந்த பாண்டீஸ்வரி, வீட்டை வெளியிலிருந்து பூட்டினார்.
யன்னல் வழியாக, தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது பெற்றோலையும் மண்ணெண்ணையையும் ஊற்றி தீ வைத்தார்.
இதில் ஆறு பேர் அங்கேயே உடல் கருகி உயிரிழந்தனர் 13 வயது சிறுவன் ஒருவன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தான்.
சரணடைந்த பாண்டீஸ்வரியை பொலிஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
No comments
Post a Comment