மணமகளுக்கு திடீரென தாலி கட்ட முயன்ற சு.சுவாமி.. கையைத் தட்டி தடுத்த சந்திரலேகா!!
நெல்லை: திருநெல்வேலியில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியை அருகில் இருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, கையைத் தட்டி தடுத்து நிறுத்தியதால் மணமகனிடம் தாலியை கொடுத்துவிட்டார் சுப்பிரமணியன் சுவாமி.
சுப்பிரமணியன் சுவாமி ஜனதா கட்சியை நடத்தி வந்தபோது நெல்லை மாவட்ட செயலாளராக இருந்தவர் பாலசுப்பிரமணியன். தற்போது சுப்பிரமணியன் சுவாமி நடத்தி வரும் இந்துத்துவா அமைப்பான வி.ஹெச்.எஸ்-ல் பொதுச்செயலாளராக இருக்கிறார்.
இந்த பாலசுப்பிரமணியன்-வேணி ஆகியோரின் திருமணம் சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள முருகன் கோயிலில் இன்று காலை நடைபெற்றது. அப்போது மணமகளின் பெற்றோர் தாலியை தொட்டு மணமகனிடம் கொடுக்குமாறு சுப்பிரமணியின் சுவாமியிடம் தந்தனர்.
தாலியை பெற்றுக் கொண்டு கையில் வைத்தபடி மந்திரங்களை உச்சரித்த சுப்பிரமணியன் சுவாமி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மணமகள் கழுத்தில் தாலியை கட்டுவதற்காக கொண்டு சென்றார். அப்போது அருகில் இருந்த சந்திரலேகா ஆடிப் போய் பதறியபடி சுப்பிரமணியன் சுவாமியின் கையை தட்டி தடுத்தார்.
அதன் பின்னரே சுப்பிரமணியன் சுவாமி தாலியை மணமகனிடம் கொடுத்தார். சாமி செயலால் அதிர்ந்த சந்திரலேகா அவரை கடுமையாக முறைத்துப் பார்த்தார். பின்னர் சமாளித்து சிரித்தார். இதைத் தொடர்ந்து மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.
மணமகளின் கழுத்தில் திடீரென சுப்பிரமணியன் சுவாமி தாலி கட்ட முயன்ற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது இது தொடர்பான வீடியோ காட்சிதான் சமூக வலைதளங்களில் இதுதான் ஹாட் டாபிக்! வீடியோ நன்றி: நியூஸ் 7
தாலி எடுத்து கொடுக்க சொன்னால் மனமகளுக்கு தாலிகட்ட போன தமிழின எதிரி சப்பிரமணிய சுவாமி
Posted by விவசாயி=farmer on Wednesday, 20 May 2015
No comments
Post a Comment