Latest News

May 17, 2015

புதிய அரசுடன் இதயத்தால் இணைந்துள்ளோம்-சுமந்திரன்! நீதிமன்ற தடைகள் முலம் தெரிகின்றது-அன்ரனி ஜெகநாதன்!!
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com
புதிய அரசு எத்தகையதென்பதை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக நீதிமன்ற தடைகளை பெற்றிருப்பதை கொண்டு புரிந்துகொள்ளமுடியுமென தெரிவித்துள்ளார் வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன்.

முள்ளிவாய்க்காலில் மே18 நினைவேந்தல்களை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இன்றிரவு 9.30அளவினில் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் , வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனிடமும் தடை உத்தரவு கடிதத்தை அவர்களது வீடுகளினில் வைத்து இலங்கைப்பொலிஸார் கையளித்துள்ளனர்.

இது பற்றி கருத்து தெரிவித்த அவர் கடந்த 12ம் திகதி நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நாங்கள் முள்ளிவாய்க்கால் கடற்கரையினில் விளக்கேற்றியிருந்தோம்.

ஆனால் எதிர்வரும் 18 ம் திகதி  நினைவேந்தல் நிகழ்விற்கு வடமாகாணசபை முதலமைச்சரே ஏற்பாடுகளை செய்திருந்தார்.இது தொடர்பினில் அவை தலைவர் சி.வீ.கே.சிவஞானம் காவல்துறையின் அனுமதிக்கு பேசியிருந்தார்.ஆனால் இப்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது.எத்தகைய தடைவந்தாலும் திட்டமிட்டபடி நினைவேந்தலை நடத்தப்போவதாகவும் முதலமைச்சரது ஆலோசனைக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் புதிய அரசுடன் இதயத்தால் இணைந்திருப்பதாக கூறுகின்றார்.சம்பந்தனோ நாட்டை பிரியவிடாது தடுத்ததற்காக நினைவு கூர சொல்கின்றாரே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தனிப்பட்ட கருத்துக்களிற்கு பதிலளிக்க தயாரில்லையென தெரிவித்ததுடன்  புதிய அரசு எத்தகையதென்பதை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக நீதிமன்ற தடைகளை பெற்றிருப்பதை கொண்டு புரிந்துகொள்ளமுடியுமென தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments