முன்னாள் ஶ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த அறிவிப்பை ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை தாம் இழக்க நேரிடும் என்ற பயம் காரணமாகவே பொதுத்தேர்தல் போட்டியை மஹிந்த தவிர்ப்பதாக தெரிய வருகிறது.
அதற்கு மாற்றீடாக கோத்தபாய ராஜபக்ஷ களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சில கட்சிகள் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராகவும், கோத்தபாய ராஜபக்ஷவை முன்னணி வேட்பாளராகவும் நிறுத்தி பொதுத்தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment