Latest News

May 10, 2015

சரவணை கிழக்கு தீவகத்தைச் சேர்ந்த,விழிப்புலன் இழந்த பெரியவரினால் கற்பூரம் விற்றுஆரம்பிக்கப்பட்ட கல்வி நிதியம்
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, transnational government of tamil eelam,www.lankasri.com
தீவகம் வேலணை சரவணை கிழக்கைச் சேர்ந்த,திரு வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள்-10.03.1940 ஆம் ஆண்டு சரவணையில் பிறந்தவர் ஆவார்.
இவருடன் கூடப்பிறந்தவர்கள் எட்டுப் பேர்கள்-இவரது தந்தையார் சிறு வயதிலே இறந்து விட குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது.சாதாரண சிறுவர்களைப் போல் விளையாடித் திரிந்த கந்தசாமி அவர்களின் 12வது வயதில் ஏற்பட்ட பொக்குளிப்பான் நோய்த் தாக்கத்தினால்,கந்தசாமி-தனது இரண்டு கண்களின் பார்வையையும் முழுமையாக இழந்தார்.
தந்தையின் இழப்பாலும்,குடும்ப வறுமையினாலும்,கண்பார்வை பறி போனதனாலும்,மனம் உடைந்து போன கந்தசாமி அவர்கள் 1954 ஆம் ஆண்டு தனது 14 வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி-தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகனிடம் அடைக்கலமானார்.மனத்திடம் மிக்க கந்தசாமி அவர்கள்-தான் உழைத்து வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் சந்நிதியான் சந்நிதானத்திலிருந்து கற்பூரம் விற்கத் தொடங்கினார்.முருகனுக்கு தொண்டு செய்வதுடன்-கற்பூரம் விற்கும் தொழிலையும்,மன நிறைவுடன் செய்து வந்தார்.
யாழ் விழிப்புலன் இழந்தோர் சங்கத்துடன்-1980 ஆம் ஆண்டளவில்  தன்னை இணைத்துக் கொண்டு-தன்னால் முடிந்த உதவிகளை,இச்சங்கத்திற்கு செய்து வந்தார்.மேலும் தனக்குக் கிடைக்காத,கல்வியை-விழிப்புலன் இழந்தவர்களுக்கு கிடைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் செயற்படத் தொடங்கினார். அந்த எண்ணத்தின் வெளிப்பாடாக-தனது கற்பூரம் விற்கும் பணத்தின்  மூலம் 1996 ஆம் ஆண்டு விழிப்புலன் இழந்த மாணவர்களின் நலன் கருதி-10.000 ரூபாக்களுடன் “கந்தசாமி கல்வி நிதியம்” என்ற பெயரில் ஒரு கல்வி நிலையத்தினை ஆரம்பித்தார்.
பெரியவர் கந்தசாமி அவர்கள் -அன்றிலிருந்து இன்று வரை தனது உடல் உழைப்பையும்,தனக்குக் கிடைக்கின்ற அனைத்து உதவிகளையும்,இக்கல்வி நிதியத்திற்கே செலவிட்டு வருகின்றார்.இக்கல்வி  நிதியமானது-யாழ் விழிப்புலன் இழந்தோர் சங்கத்தின் கீழ் இயங்கி வருகின்றது.
இக்கல்வி நிதியத்தின் மூலம் கல்வி கற்ற விழிப்புலன் இழந்த பலர்-பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைப் பெற்று-அரசாங்கத்தின் அரச துறைகளிலும்,தனியார் துறைகளிலும் உயர் பதவிகளில் இருப்பதாக பெருமிதத்துடன் பெரியவர் கந்தசாமி அவர்கள் கூறுகின்றார்.வடக்கில் மட்டுமல்ல-இலங்கை பூராவும்,பல விழிப்புலன் இழந்த கல்வியாளர்களை உருவாக்கியுள்ளதாக கூறும் பெரியவர்-இந்நிதியத்தின் மூலம் பயன் பெற்ற,சட்டவாளரும்,யாழ் விழிப்புலன் இழந்தோர் சங்கத்தின் தலைவருமான திரு அல்போன்ஸ் ஸ்ரனின் அற்புதராஜ் அவர்கள் ஓர் சான்றாவார் என்றும் தெரிவிக்கின்றார்.
திரு அல்போன்ஸ் ஸ்ரனின் அற்புதராஜ் அவர்கள் தான் இலங்கையில் விழிப்புலன் இழந்த தமிழ்பேசும் முதலாவது சட்டவாளர் என்ற பெருமையினைக் கொண்டவர் ஆவார்.இச்சட்டவாளரின் வெற்றிக்குப் பின்னால்,கந்தசாமி என்ற கல்வி கற்க முடியாமல் தவித்த ஓர் உள்ளத்தின்-கொடையும்,தியாகமும்,தூரநோக்கும் இருந்தது என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மையாகும்.
கந்தசாமி கல்வி நிதியத்திற்கு,நிதிப்பற்றாக்குறை ஏற்பட்ட போதெல்லாம்-தனது கற்பூரம் விற்கும் தொழிலை நிறுத்தி விட்டு-பிறரிடம் கைநீட்டி உதவி கேட்பாராம்-அப்போது பலர் தன்னை ஏசி அனுப்பியதுடன் பரிகாசம் பேசுவதும் தனது காதில் கேட்குமாம்.இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாது மனம் தளராமலும் தொடர்ந்தும் திரும்பத் திரும்பச் சென்று உதவிகளை கேட்டுப் பெற்றுக் கொள்வதுண்டு என்று கூறுகின்றார்.
திரு வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் கூறுகையில்…
தற்போது இந்நிதியத்திற்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும்-முதுமை காரணமாக முன்பு போல தன்னால் நிதி திரட்ட முடியவில்லை என்றும்-தன் இறப்பிற்குப் பின்பும் இந்நிதியம் கல்விச் சேவையாற்ற வேண்டும் என்று கண் கலங்கும் அவர்-இவ்விழிப்புலன் இழந்தவர்களின் கல்விக்காக-உள் நாட்டிலும்,புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் ஒவ்வொருவரும் முன் வர வேண்டும் என்ற உருக்கமான வேண்டுகோளிளையும் முன் வைக்கின்றார்.இவரது வேண்டுகோள் நியாயமானது என்பதனால்,மனித நேயம் மிக்க அனைவரும் இணைந்து கை கொடுப்போம் வாருங்கள்!
தனக்குக் கிடைக்காத கல்வியை,தன்னைப் போல் விழிப்புலன் இழந்தவர்கள் கற்றுப்பயன் பெற வேண்டுமென்று மெழுதிரியாய் இருந்து வெளிச்சம் தரும் பெரியவர் வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள்-நீண்ட ஆயுளுடனும்-நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ-அந்த செல்வச்சந்நிதி முருகனே அருள்பாலிக்க வேண்டும் என்று உங்கள் சார்பில் விவசாயி இணையம் வேண்டி நிற்கின்றது.
சரவணையின் மைந்தன் என்பதனால்-பெரியவர் கந்தசாமி பற்றிய இத்தகவலை வெளியிடுவதில் விவசாயி இணையம் இரட்டிப்பு மகிழ்ச்சி கொள்கின்றது.

நன்றி அல்லையூர்
« PREV
NEXT »

No comments