Latest News

May 15, 2015

ஊடகவியாளர்கள் விடயத்தில் காவற்துறை அக்கறையின்மை -தக்குதலுக்கள்ளளான ஊடகவியாளர்
by admin - 0

திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் கடந்த 11 ம் திகதி அப்துல் சலாம் யாசீம் ஆகிய நான் செய்தி சேகரிக்க சென்ற போது கொடூரமான முறையில் தாக்கப்பட்டேன்.

ஆனாலும் என்னை தாக்கிய நபர் இன்னும் கைது செய்யப்பட வில்லை .அரசியல் வாதி ஒருவரினால் பொலிசாருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையின் பேரில் இவர் கைது செய்யப்படாமல் உள்ளதாகவும் தெரிய முடிகின்றது .
உண்மைக்கு அழிவில்லை என்ற வசனம் ஒரு போதும் மாறாது என்ற நம்பிக்கையில் நான் தற்பொழுது எனது ஊடக மகத்தான சேவையை தொடர்கின்றேன் .

கடந்த 11 ம் திகதி தாக்கப்பட்டது ரொட்டவெவ மதரஸா மண்டபத்தில் விவசாய சங்க கூட்டத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல் நடை பெரும் நேரத்தில் அதனை புகைப்படம் எடுத்ததுடன் -வீடியோவும் செய்தேன் .அதன் நேரத்தில் தான் நான் தாக்கப்பட்டேன் .

அதே நேரம் பொலிஸ் உத்தியோகத்தர் அவ்விடத்தில் இருந்தும் தாக்கிய நபருக்கு எதிராக எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை .

கையில் புகைப்படக்கருவியை வைத்துக்கொண்டிருந்த போதே என்னை தாக்கினார் என்று தெரிந்திருந்தும் பல கோணங்களில் பொலிஸார் அரசியல் வாதியின் பேச்சுக்காக வேண்டி கைது செய்யாமல் என்னை வைத்தியசாலை விட்டு வருமாறு பணிப்பது மட்டுமே தவிர என்னை தாக்கியவரை கைது செய்ய எடுக்காதது ஊடகவியலாளர்கள் விடயத்தில் பொலிஸார் அக்கறையின்றி செயற்படுவதை காணமுடிகின்றது .

நான் தாக்கப்பட்டது குறித்து  பல நபர்கள் வாக்கு மூலம் வழங்கியும்  சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படாதது மிகவும் வேதனையளிப்பதாகவும் செய்தியாளர் அப்துல்சலாம் யாசீம் பலரிடம் கருத்துக்களை தெரிவித்துள்ளார்

« PREV
NEXT »

No comments