கடந்த ஆண்டு தமிழீழ மாவீரர் நாளுக்கு விளக்கேற்றி நினைவு கூர்ந்தமைக்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று மாலை முல்லைத்தீவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற இரு காவல்துறை அலுவலர்கள் ,இது தொடர்பான அழைப்பாணையை அவரிடம் வழங்கியுள்ளனர். கொழும்பு தலைமை அலுவலகத்திலிருந்து இந்த விசாரணை வலியுறுத்தல் வந்ததாகவும், நாளை காலை 10 மணியளவில் முல்லைத்தீவு தலைமை காவல்துறை நிலையத்திற்கு நேரில் வந்து வாக்குமூலத்தை அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
ரவிகரன் |
இதேவேளை ஆட்சி மாறியிருக்கும் இத்தருணத்தில் மே மாதம் 18 ம் திகதி முள்ளிவாய்க்காலில் பலியான மக்களுக்கு புதிய அரசாங்கம் அஞ்சலி செலுத்த அனுமதிக்குமா என்பது தொடர்பாக இப்போதே தமிழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.
ஏனெனில் அரசாங்கம் யுத்த வெற்றிவிழாவை கொண்டாட தயாராகிவருகின்றது.
No comments
Post a Comment