எவென்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையை மூடிமறைப்பதற்கு தனக்கு மாதாந்தம் 20 மில்லியன் ரூபாவை லஞ்சமாக தருவதற்கு தன்னுடன் பேச்சுவார்தை நடாத்தியதாகவும், தான் உடன்படாததனால் அது கைவிடப்பட்டதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.
தனக்கு தன்னுடைய நண்பர் ஒருவரின் மூலம் இந்த லஞ்சத்தை வழங்க ஏற்பாடு செய்திருந்ததாகவும், தன்னிடம் இது தொடர்பிலான பதிவுகள் காணப்படுவதாகவும் தேவையானபோது அவற்றை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
No comments
Post a Comment