Latest News

May 24, 2015

வித்தியா படுகொலை விசாரணைகளை தடுக்க மஹிந்த அரசுடன் இருந்த ஆயுதக்குழுக்கள் சதி - சுமந்திரன்
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெறாமல் தடுக்க சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தச் சூழ்ச்சியின் பின்னணியில், யாழ். மாவட்டத்தில் தீவுப்பகுதிகளை முன்னர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆயுதக்குழுக்கள் மற்றும் முன்னைய ஜனாதிபதி மஹிந்த அரசுடன் சேர்ந்து இயங்கிய கட்சிகள் மும்முரமாக செயற்படுவதாகவும் கூட்டமைப்பு எடுத்துரைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று முன்தினம் வெளிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை, அதனால் வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வரும் போராட்டங்கள், மாணவி படுகொலையின் பின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் அவர்கள் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்புக் குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ‘முன்னைய மஹிந்த அரசுடன் இருந்த ஆயுதக்குழுக்கள், கட்சிகள், புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையினால் ஏற்பட்டுள்ள அவலச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பாவித்து, எதிர்ப்புப் போராட்டங்களை வன்முறையாக மாற்றுவதற்குச் சதிசெய்கின்றன. அது தெளிவாகத் தெரிகின்றது.

மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறவேண்டும். இப்படியான படுகொலைகள் இடம்பெறும்போது எதிர்ப்புக்காட்டாமல் இருக்க முடியாது. மக்களின் இந்த உணர்வுமிக்க போராடங்களை எவரும் தடுக்கமுடியாது. மக்களுடன் நாமும் இணைந்து செயற்படுகின்றோம்.

ஆனால், மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மக்கள் நடத்தும் நீதிக்கான போராட்டத்தை வன்முறையாக மாற்றி வழக்கைத் திசை திருப்புகின்ற சூழ்ச்சி நடைபெறுவது தெரிகின்றது.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேக நபர்கள் 4 பேரினது வீடுகளைத் தீயிட்டு எரித்துள்ளனர். அந்த வீடுகளில் இருந்திருக்கக்கூடிய தடயப்பொருட்கள் இதனூடாக அழிக்கப்பட்டிருக்கும், எரிக்கப்பட்டிருக்கும். இனி அவற்றை எடுக்க முடியாது.

அதேவேளை, யாழ் நீதிமன்றத்தின் கட்டடத் தொகுதிகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி ஆயுதக்குழுக்களே இவ்வாறு வன்முறையைத் தூண்டி, சரியான விசாரணையை நடத்தவிடாமல் தடுப்பதற்கு சில சூழ்ச்சிகளை முன்னெடுக்கின்றன. இதனை பிரதமருக்கு தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளோம்’ என்றார்  கூறினார்.
« PREV
NEXT »

No comments