இந்நிலையில் சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டு முன்பு ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்துள்ளனர். நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா தாக்கல் செய்த அப்பீல் மனு மீது தீர்ப்பளிக்க கர்நாடகா உயர் நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளார் நீதிபதி குமாரசாமி. அவரது அறை எண் 14 திறக்கப்பட்டு தீர்ப்பு வாசிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்த தீர்ப்பு எப்படி இருக்கும்? இத்தீர்ப்பின் மீதான தமது கட்சித் தலைவர் கருணாநிதியின் கருத்து என்ன? என்பதை அறிந்து கொள்வதற்காக அக்கட்சித் தொண்டர்கள் சென்னை கோபாலபுரத்தில் குவிந்துள்ளனர். கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டை சுற்றிய சாலைகள் முழுவதும் தி.மு.க. தொண்டர்களால் நிரம்பி வழிகிறது.

No comments
Post a Comment