Latest News

May 21, 2015

பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் வித்தியாவை உயிருடன் மீட்டிருக்கலாம் – சி.வி.விக்னேஸ்வரன்
by Unknown - 0

புங்குடுதீவு வித்தியா காணாமற்போன தினத்தன்று பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் அவரை உயிருடன் மீட்டிருக்க முடியும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் 29 வது அமர்வில் புங்குடுதீவு வித்தியாவிற்கு ஆற்றிய அனுதாப உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண சபையின் இன்றைய அமர்வின்போது புங்குடுதீவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அனுதாப உரைகள் நிகழ்த்தப்பட்டன.

வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வின்போது ஒன்பது பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேச காணிகளை வில்பத்து விலங்குகள் சரணாலயக் காணிகள் எனக் காட்டும் செயற்பாடுகளைக் கண்டிப்பதுடன் குறித்த மக்களின் குடியிருப்புக் காணிகளை, விவசாய நிலங்களை, மேய்ச்சல் நிலங்களை தொடர்ந்தும் அப்பிரதேச மக்களுக்கு உரித்தான காணிகளாகவே இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதேவேளை, மன்னார் மாந்தை மேற்கு பெரியமடு கிராமத்தில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கைவிடப்பட்ட விவசாய நிலங்களை மீண்டும் விவசாய நடவடிக்கைக்கு உகந்த நிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

« PREV
NEXT »

No comments