கிளிநொச்சி பரந்தனில் 11 வயதான சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமை மக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கிளிநொச்சி, பரந்தன் – கோறக்கன்கட்டு குடியிருப்பு பகுதியில் இவ்வாறு சிறுமி ஒருத்தியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றுக் காலை முதல் சிறுமி காணாமற்போயிருந்தார். இந்த நிலையில் அயலவர்கள் மாலை சிறுமியை சடலமாக கிணற்றிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதுடன், விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கடந்த இரு நாடகளின் முன்னர் ஏழு வயதுச் சிறுமி ஒருத்தி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி இருந்தார். இந்த நிலையில் சிறுமி ஒருத்தி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Post a Comment