Latest News

May 15, 2015

யாழில் இன்றும் ஒரு பெண்ணின் சடலம்
by admin - 0


Tamilnews,News,Jaffna , sadalam
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இளம்பெண்ணொருவரின் சடலம் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் மானிப்பாய் கிழக்கு மானிப்பாயை சேர்ந்த சோமசுந்தரம் அனித்தா (வயது 33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தொடர்ச்சியாக சிகிச்சைகள் மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காணமற்போயிருந்தார்.

கடும் மழை காரணமாக தேடுதல் மேற்கொள்ளமுடியாத நிலையில் உறவினர்கள் நேற்றுக் காலையே இவரை தேடியுள்ளனர்.

கிணற்றிலிருந்து நேற்றுக் காலை குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோ தனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

புங்குடுதீவில் நடந்த சம்பவத்தின் சோகம் முடிய முன் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது  சிங்கள இராணுவம் நிறைந்திருக்கும் தேசத்தில் இப்படியான சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறதா? என்னும் சந்தேகம் தமிழர் மத்தியில் இடம்பெறுகிறது அதாவது புங்குடுதீவில் நடந்த சம்பவத்தில் சிங்கள காவற்துறையினரின் நடவடிக்கை குற்றவாளிகளை தப்பவைக்கும் செயல் மற்றும் திசைதிருப்பும் செயல்கள்.

தமிழின அழிப்பை மேற்கொள்ளும் சிங்களம் தமிழ் காவலிகளை மற்றும் காமுகர்களை சிங்களம் தனது இனவழிப்புக்கு பயன்படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

« PREV
NEXT »

No comments