யாழ். நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்!- போராட்டக்கரர்களின் ஊடே ஊடுருவிய ஓட்டுகுழுக்கள் தாக்குதல்
புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடையவர்களை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதையடுத்து அங்கு ஒன்றுகூடிய மக்களினால் நீதிமன்றப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
மாணவி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் மற்றும் சுவிஸ் நாட்டுப் பிரஜை ஆகியோரை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதாக அறிந்த மக்கள் அங்கு ஒன்றுகூடினர்.
மக்கள் ஒன்றுகூடியமையால் நீதிமன்ற அனைத்து வீதிகளும் மூடப்பட்டு, பாதுகாப்பு வேலிகள் போட்ட பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர் எனினும் வேலிகளுக்கு அருகில் கூடிய மக்கள் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கோஷங்கள் எழுப்பினர்.
மக்களுடன் மக்களாக ஈபிடிபி ஓட்டுகுழுக்கள் நீதிமன்ற கட்டடத்துக்கு கற்களை வீசி நீதி மன்ற வளாகத்தில் நின்ற வாகனங்கள் மீதும் தாக்கி உள்ளனர். மக்கள் மாணவ போரட்டங்களை திசை திருப்பும் நோக்கில் இவ்வாறான ஓட்டுகுழுக்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.
https://youtu.be/z7O_RI8FAXo
No comments
Post a Comment