கடந்த செவ்வாய்க்கிழமை கிழக்கு லண்டன் சட்வெல் ஹீத், குரோவ் வீதியில் உள்ள வீடு ஒன்றில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு தாய் (ஷிகி கோடுவாலா, 37) மற்றும் இரட்டைக் குழந்தைகளான நேஹா மற்றும் நிஷா (வயது 13) போன்றோரின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, இவர்கள் மூவரும் கழுத்து நெரித்து கொலையுண்டமை தெரியவந்துள்ளது.
ரெதிஷ்குமார் (வயது 44) எனும் இக்குடும்பத்தின் தலைவர், வீட்டில் இருந்து ஆறு மைல்கள் தொலைவில் உள்ள வூட்ஃபேர்ட் நீர்த்தேக்கம், வோல்தம்ஸ்ரோ பகுதியில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) காலை 8.17 க்கு அவரது உடல் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 ஆண்டுகளாக லண்டனில் சட்வெல் ஹீத், குரோவ் வீதியில், கேரளாவை சேர்ந்த ஷிகி ரெதிஷ்குமார் மற்றும் ரெதிஷ்குமார் தம்பதிகள் வசித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த மனைவி ஷிகி (37) சமூக சேவைகள் செய்து வந்த நிலையில் இவர்களது மகள்கள் நேஹா, நியா (13) இங்கிலாந்துப் பாடசாலையில் கல்வி கற்று வந்தனர்.
இவர்களது வீடு பூட்டியே கிடந்தமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த புகாரின் பேரில் ஸ்காட்லாந்து போலீசார், வீட்டுக்குள் புகுந்து சோதனையிட்ட போது ஷிகி, நேஹா, நியா ஆகியோர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர், அவர்கள் மூவரும் கழுத்து நெரித்து கொலையுண்டமை உறுதி செய்யப்பட்டமையைத் தொடர்ந்து, இக் குடும்பத் தலைவரான ரெதிஷ்குமாரே இவர்களை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும் அக் கொலைக்கான சரியான காரணத்தை கண்டறியும் பொருட்டு ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments
Post a Comment