Latest News

May 22, 2015

அநுராதபுர சிறைக்கு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டவர்களை நோக்கி பெற்றோல் குண்டு வீச்சு
by admin - 0

நேற்று நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலகம் விளைவி்த்து கைது செய்யப்பட்ட 129 ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று யாழ் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் வழக்கை எடுத்த நீதிபதி அவர்களைக் கடுமையான முறையில் எச்சரித்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இவர்களை யாழ் சிறைச்சாலையில் தங்க வைப்பதற்கு இடவசதி இல்லாத காரணத்தால் அனுராதபுரம் சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந் நிலையில் இன்று மாலை யாழ் சிறைச்சாலைப் பகுதியில் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது.

விளக்கமறியல் கைதிகளான 129 பேரையும் பேரூந்தில் ஏற்றி வைத்திருந்த போது அப் பேரூந்துகளுக்கு இனந்தெரியாதவர்கள் பெற்றோல் பைகளால் தாக்குதல் மேற்கொண்டதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து பெற்றோல் பையை எறிந்த இனந்தெரியாத நபர்களை பொலிசார் துரத்திச் சென்றதாக தெரியவருகிறது .


« PREV
NEXT »

No comments