பிரதமர் வேட்பாளராக என்னை நிறுத்தவும் மஹிந்த -கடுப்பில் வெளியேறிய மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை இன்று முற்பகல் 01.30 மணிக்கு பாரளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதிக்கான அலுவலகத்தில் நேரடியாகச் சந்தித்தாா்.
இச் சந்திப்பில் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி விடயமாகவே சந்திப்பு நடைபெற்றது. இதில் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் அரசியல் பீட உறுப்பிணா்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் 5 முக்கிய வியங்கள் பற்றி கலந்துரையாடப் பட்டது.
இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை சுதந்திரக்கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,
எதிர்வரும் பொதுத்தேர்தளில் சுதந்திரக் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட உள்ளவர், மாகாண சபைகளின் அதிகாரங்களை மட்டுப்படுத்தல், எதிர்வரும் பொதுத்தேர்தளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக செயல்படுதல், வேட்பாளர்கள் தொடர்பில் வேட்புமனு தாக்கல் செய்தல், விசேட குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் FCDI யின் விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபாலவிடம் கலந்து பேசப்பட்டுள்ளது.
அதேவேளை நம்பத்தகுந்த இடத்தில் இருந்து எமக்கு கிடைத்த தகவல்களின் படி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ, ‘தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்ததாகவும், FCDI மேற்கொள்ளும் விசாரணைகளை மட்டுப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்ததாகவும், அதனை மறுத்த ஜனாதிபதி மைத்திரிபால அத்துடன் கலந்துரையடலை நிறுத்தியதாகவும் மேலும் தெரிய வருகிறது.
No comments
Post a Comment