Latest News

April 10, 2015

சுன்னாகம் கிணறுகளில் கழிவு எண்ணெய் உண்மை- நீரை அருந்த வேண்டாம்-ஹக்கீம்
by Unknown - 0


சுன்னாகம் பகுதியிலுள்ள பல கிணறுகளில் கழிவு எண்ணெய் படிமங்களும் கிறீஸ் படிமங்களும் காணப்படுவது உண்மையென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின்  நிபுணர் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்தியிருப்பதால் அக்கிணறுகளின் நீரை மக்கள் அருந்த வேண்டாமென  நகர  அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டார். 

அத்துடன் இக்கழிவு எண்ணெய் மற்றும் கிறீஸ் படிமங்கள் வேறு கிணறுகளுக்கும் பரவி வருவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், இப்பகுதி  கிணறுகளில் கழிவு எண்ணெய்  படியவில்லையென வடக்கு மாகாண சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை கூறுவதாக கூறப்படுகின்ற நிலையில், அவ்வறிக்கையை நான் கேட்டும் கூட இதுவரைக்கும் தன் கண்ணில் காட்டவில்லையெனவும் குற்றம்சாட்டினார். 

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான டக்ளஸ் தேவானந்தா 23 இன் கீழ் 2 இன் அடிப்படையில் சுன்னாகம் கிணறுகளில் அப்பகுதியிலுள்ள நொதேண் பவர் நிறுவனத்தின் கழிவு எண்ணெய்கள் கலப்பது தொடர்பாக விசேட கூற்றை முன்வைத்த போதே நகர அபிவிருத்தி மற்றும்  நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
« PREV
NEXT »