![]() |
பசில் |
கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் 'மிஸ்டர் டென் பெர்சன்ட்' என்ற குறிப்பெயரில் அழைக்கப்பட்ட ஜனாதிபதியின் சகோதரர் பசில் ரோஹன ராஜபக்ஷ என்பது முழு நாட்டிற்கும் தெரிந்த விடயமாகும். 2005-2006 வருடத்தில் டென் பெர்சன்டில் ஆரம்பித்த பசில் ராஜபக்ஷ 10 வருடங்களில் 50% முடிவு செய்துள்ளதாக முழு நாடும் பேசப்பட்டு வருகிறது.
பசிலின் செயலை முன்னுதாரணமாக எடுத்து நல்லாட்சி அரசாங்கத்திலும் 'மிஸ்டர் டென் பெர்சன்ட்'மார்கள் அதிகம் உருவாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய திட்டங்களில் அன்றி பழைய திட்டங்களுக்கு ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் விடுவிக்கவென இவர்கள் இவ்வாறு கொமிஷன் பணம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஒப்பந்தக்கார்ரகளுக்கு பணம் செலுத்தவே நிதி அமைச்சர் மத்திய வங்கி பிணையத்தில் மேலதிக 400 பில்லியன் கோரியதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை இவ்வாறு இருக்கையில் பிரதமர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் 10% தரகு பணம் பெற்று 'SMS Holdings' நிறுவனத்திற்கு கொழும்பு நகர் அபிவிருத்திக்கென நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடான 300 மில்லியன் பணத்தை செலுத்தியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் 10% யார்? பெயர் கூறாது செய்தி வௌியிட்டுள்ளமை முன் எச்சரிக்கை ஒன்றுக்காகவாகும்.
No comments
Post a Comment