வடமராட்சி பிரதேசத்தில் கடந்த சிலதினங்களாக பகுதி பகுதியாக சில மணிநேரம் மழை பெய்து வருவதால் புகையிலையை உலரப்போட்ட விவசாயிகளும் புகையிலை வியா பாரிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரதேசத்தில் புகையிலை அறுவடை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு புகையிலைச்செடி ரூபா 100 தொடக்கம் 150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
சராசரி விலை யாக 120 ரூபாவாக விற்கப்படுகின்றது.
புகையிலைச் செடிகள் கொள்வனவு செய்யப்பட்டு உலர்த்தி பதனிட்டு தென்பகுதிக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றது. அதற்காக புகையிலை செடியை போட்டிபோட்டுக் கொண்டு கொள்வனவு செய்து வருகின்றனர்.
அத்துடன் சில விவசாயிகள் தமது புகையிலைச் செடியை தாமே வெட்டி எடுத்து உலர்த்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது புகையிலை அறுவடை உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் மதில்களிலும், கயிற்றுக் கொடிகளிலும் உலரப்போடப்பட்டுள்ள பெருமளவிலான புகையிலைகள் பகுதி பகுதியாக திடீர் திடீர் எனப் பெய்துவரும் மழையில் நனைந்து அழுகும் நிலையை எட்டியுள்ளன.
மழை தொடர்வதால் வியாபாரிகள், விவசாயிகளுக்கு பெரும் இழப்பும் நட்டமும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment