Latest News

April 08, 2015

மகிந்தவின் ஆட்சியே தொடர்கிறது – தமிழ் தேசிய கூட்டமைப்பு
by admin - 0

சிறிலங்காவில் தற்போதும் மகிந்தராஜபக்ஷவின் ஆட்சியே தொடர்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

மகிந்தராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

தற்போது ஆட்சி மாற்றம் இடம்பெற்று மைத்திரி ஆட்சி இடம்பெறுவதாக கூறப்பட்டாலும், இந்த அச்ச நிலை தொடர்ந்தும் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் வெளிநாடுகளில் நாடு திரும்பிய 16க்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் கைது செய்யப்ப்டடுள்ளனர்.

இதற்கு பெயர் நல்லாட்சியா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
« PREV
NEXT »

No comments