Latest News

April 11, 2015

பந்துல குணவர்த்தன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கம்!
by Unknown - 0


பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமக்கு கட்சித் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

மத்திய செயற்குழுவின் தீர்மானங்களுக்கு முரணாக செயற்பட்ட காரணத்தினால், அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிங்கப்பூர் பிரஜையை மத்திய வங்கியின் ஆளுனராக நியமித்த விடயம் மற்றும் திறைசேரி முறிகள் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் தோற்கடித்தமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமது அங்கத்துவம் நீக்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த முயல்பவர்களுக்கு எதிராக திரண்டமைக்காக இடம்பெற்ற ஒரு நடவடிக்கையாகவே இதனைக் கருதுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன மேலும் கூறினார்.
« PREV
NEXT »