4.30மணி நிகழ்வுக்கு 3.00மணிக்கே நிகழ்வு நடைபெறும் பகுதிகளுக்கு வரவேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட நிலையில்,நிகழ்விற்கு வருகை தந்த செய்தியாளர்கள் கடுமையான முறையில் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ விஜயம் செய்த போது இருந்த கொடுபிடிகளை விட மைத்திரிபாலவின் விஜயத்தின்போதே இந்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு உட்பட்டதாக நிகழ்வில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்கும் நிலைமையேற்படும் என கடந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால வழங்கிய போதிலும் இன்று அந்த உறுதிமொழிக்கு நேர்மாறாக தம்மை கெடுபிடிகளுக்கு உட்படுத்தியுள்ளதாக கவலை தெரிவிக்கும் ஊடகவியலாளர்கள்,இன்று ஜனாதிபதியின் வருகையையொட்டி மட்டக்களப்பின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால மட்டக்களப்புக்கு வருகைதந்தபோது ஊடகவியலாளர்களுக்கு எந்தவித கெடுபிடிகளும் இல்லாமல் தாம் அருகில் சென்று செய்தி சேகரிக்க முடிந்ததாகவும் ஆனால் இன்றைய சந்தர்ப்பம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்ததாகவும் மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment