நாளாந்தம் முகம் கொடுக்கின்ற அச்சுறுத்தல்கள், காரணமாகவே இலங்கையில் அவுஸ்திரேலியா நோக்கி அகதிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இவ்வாறான அகதிகளை நிராகரித்து நாடுகடத்த வேண்டாம் கோரப்பட்டுள்ளது.
![]() |
அவுஸ்திரேலியா |
மேலும் அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்கள் நிராகரிக்கப்படும் நிலைமை முன்பில்லாத அளவு அதிகரித்துள்ளது.
அகதி அந்தஸ்த்து பெறுவதற்காக தற்போதுள்ள கூறப்படுகின்ற காரணங்களையே, ஐந்து வருடங்களுக்கு முன்னர் கூறியவர்களுக்கு அகதி அந்தஸ்த்து கிடைத்துள்ளன.
ஆனால் தற்போது இந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன.
இதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்துக்கான சட்ட மாற்றங்களே காரணம்.
இதன் மூலம் அவுஸ்திரேலிய அரசாங்கம் பாரிய மனித உரிமை மீறிலில் ஈடுபட்டுள்ளது என்று அந்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
Social Buttons