Latest News

April 17, 2015

அமைச்சர் ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தீர்மானம்!
by Unknown - 0


நிதி அமைச்சர் ரவி கருணா நாயக்கவுக்கு எதிராக நம்பிக் கையில்லா பிரேரணை யொன்றை சமர்ப்பிக்க ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் 100 நாட்களுக்குள் நாசமடைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவே பிரதான காரணம் என்பதால் 19 அம்சங்களினடிப்படையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர இருப்பதாக ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.

ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கால்டன் இல்லத்தில் கூடியது.

இதன் போதே இந்த முடிவு எடுக்கப் பட்டதாக அவர் கூறினார்.
« PREV
NEXT »

No comments