மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள ஹொட்டல் ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்ததில் ஹொட்டலின் முன்பகுதி தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலையில் இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி 2ம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள தாஜ் ஹொட்டலின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு அடுப்பு வெடித்ததில் ஹொட்டலில் தீப்பிடித்தது.
இதையடுத்து ஹொட்டல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீ ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினர் அங்கு விரைந்து சென்று தீயை முற்றாக அணைத்தனர்.
ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தீயை அணைப்பதற்கும் உதவினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment