கழிவு எண்ணெய்க் கசிவினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேச மக்கள் நல்லூர் ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர்
காலை 8 மணிக்கு ஆரம்பமான இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட மக்கள் "பொறுப்புக் கூற வேண்டியவர்களே ஏன் மௌனம்?" "முதலமைச்சரே தூய நீரிற்கான விசேட செயலணியின் இணைத்தலைமையைப் பொறுப்பேற்குக" என்பன உள்ளிட்ட பல சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டத்தின் இறுதியில் மக்கள் பேரணியாக சென்று வட மாகாண முதலமைச்சர், ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜர்கள் கையளிக்கவுள்ளத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment