Latest News

April 02, 2015

நண்பேண்டா திரைவிமர்சனம் !
by Unknown - 0

நண்பேண்டா திரைவிமர்சனம்,www.vivasaayi.com

வெற்றி கூட்டணி என்று தமிழ் சினிமாவில் ஒன்று உருவாகிவிட்டால் போதும், அந்த கூட்டணியை சுற்றி எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் உதயநிதி - சந்தானம் கூட்டணியில் ஹாட்ரிக் லிஸ்டில் வந்திருக்கும் படம் நண்பேன் டா .

இப்படத்தை ஓகே ஓகே ராஜேஷிடம் துணை இயக்குனராக பணியாற்றிய ஜெகதிஷ் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமஷனுக்காக, உதயநிதி கொடுத்த ஒரு பேட்டியில் நண்பேன்டா படத்தை ஓகே ஓகே ரீமேக் என்று கூட சொல்லலாம் என்றார். ஆனால் அவரின் முந்தைய படமான இது கதிர்வேலன் காதல் படத்தையும் சேர்த்து கொள்ளலாம் என்று படம் முடிந்த வெளியே வந்த போது அவருடைய ரசிகர்கள் சொன்னார்கள். 

கதை

துரத்தி துரத்தி காதலிக்கும் ஹீரோ(உதயநிதி ) அந்த காதலுக்கு பல சமயம் தொந்தரவாகவும் சில சமயம் உதவியாகவும் இருக்கும் ஹீரோவின் நண்பன் (சந்தானம்). இவர்களின் ரகளையில் அந்த காதல் பாதியில் பிரிய கடைசியில் அந்த காதல் கை கூடியதா என்பது தான் கிளைமாக்ஸ். 

இதில் ஒரு புதுமையாக படத்தில் அனைத்து இடங்களிலும் காமெடி தான் மைய பகுதி.தஞ்சாவூரில் வெட்டியாக சுற்றி திரியும் உதய். அவரின் அப்பாவின் தொந்தரவால் தன் நண்பனை (சந்தானத்தை) தேடி திருச்சி செல்கிறார். திருச்சி இறங்கியவுடன் நயன்தாராவை பார்க்கிறார், உடனே காதல் பற்றி கொள்கிறது. 

பிறகு காதல் மயக்கத்தால் உதயநிதி கொடுக்கும் இம்சைகளைத் தாங்கிக் கொண்டு சந்தானமும் அவரது காதலுக்கு ஒரு கட்டத்தில் உதவுகிறார். இடைவேளையின் போது நயன்தாரவுக்கும், உதயநிதி மேல் காதல் வர, அவரிடம் காதலை சொல்லும்முன் தன் கடந்த கால வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை உதயநிதியிடம் சொல்கிறார் (அங்கே தான் இயக்குனர் வைக்கும் ட்விஸ்ட்). அதை கேட்டு உதயநிதி கேலியாக சிரித்து அதுக்கு ஒரு கவுன்ட்டர் கொடுக்க நயன்தாராவுக்கு கோபம் தலைக்கு மேல் வருகிறது, பிறகு என்ன அந்த காதல் அங்கயே முறிகிறது.

மறுபடியும் அந்த காதலை ஒன்று சேர்க்க உதயநிதி - சந்தானம் போடும் திட்டம், அந்த திட்டத்தினால் அவர்கள் ஜெயிலுக்கு போக கடைசியில் அந்த காதல் வெற்றிபெற்றதா?, இவர்கள் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார்களா? என்பது தான் நண்பேண்டா வின் முழு கதை.

நடிகர், நடிகைகளின்

உதயநிதி நடிப்பை விட வசன உச்சரிப்பில் கொஞ்சம் தேர்ச்சி பெற்று இருக்கிறார். இந்த படம் வழக்கமான அவருடைய முந்தைய படம் போலே இருப்பதால் நடிப்புக்கு ஒன்று பெரிய ஸ்கோப் இல்லை. டான்ஸ் இந்த படத்தில் நன்றாக ஆடியுள்ளார். மக்கள் என்னிடம் இது தான் எதிர்பார்க்கிறார்கள் என்று இதே மாதிரி படங்கள் இனிமேல் நடித்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.

சந்தானம் இந்த படத்தில் கவுண்டர்க்கு மட்டுமில்லாமல் பாடி லாங்வேஜிலும் கவனம் செலுத்தியுள்ளது ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதுவும் நயன்தாரா தங்கி இருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் இழுத்து மூடப்படுகிறது என்ற தெரிந்துவுடன் உதய் - சந்தானம் சேர்ந்து ஹாஸ்டல் முன்பு நடத்தும் போராட்டம் செம ரகளை.சந்தானத்தின் காமெடி இந்த படத்தில் ஒரு 50 சதவிகிதம் தான் எடுபட்டது தவிர பல இடங்களில் பேசியே கொன்றார். 

அதுவும் இது போல் நண்பனுக்கு உதவும் கதாபாத்திரத்தில் பார்த்து பார்த்து சலித்து போய் விட்டது.நயன்தாராபடத்தின் மிகப்பெரிய ஆறுதல் நயன்தாராவுடைய ஸ்க்ரீன் பிரசன்ஸ், என்ன அழகு, அவருடைய இயல்பான, எளிமையான தோற்றம், பாடல்களில் அவரின் உடையலங்காரமும், அழகான நடனமும் ரசிகர்களை கவரந்துள்ளது. இருந்தாலும் நடிப்பை பற்றி சொல்கையில் இது கதிர் வேலன் காதல் பார்த்த அதே நயன் தான் இதிலும்.

க்ளாப்ஸ்
  • 1. நயன்தாரா தோன்றும் காட்சிகள்
  • 2. படத்தின் முதல் பாதி
  • 3. பாலசுப்ரமணியமின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு
  • 4. சந்தானத்தின் ஒரு சில காமெடி வசனங்கள்



பல்ப்ஸ்
  • 1. ஓகே ஓகே , இது கதிர்வேலன் காதல் படத்தின் அப்பட்டமான சாயல்
  • 2. போர் அடிக்கும் பல காமெடிகள்
  • 3. ஹாரிஸின் எடுபடாத இசை, (படத்தின் அனைத்து பாடலிலும் திரை அரங்கில் ஆள் இல்லை)

எந்தவொரு புதுமையான விஷயத்தையும் எதிர்பார்க்காமல் இந்த படத்தை பார்க்க போனால் இந்த படம் நிச்சயம் எண்டர்டெய்மெண்டாக இருக்கும்.கடைசியாக இயக்குனர் ஜகதீஷ் தான் குருவான ராஜேஷ் போலவே படம் எடுப்பேன் என்பதற்க்காக உங்க படத்தை அதாவது ஓகே ஓகே படத்தையே எடுத்து விட்டாரே .மொத்தத்தில் நண்பேன்டா - சொல்லும் படி பெரிதாக ஒன்றும் இல்லையடா
« PREV
NEXT »