முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட எவ்வித தடையும் கிடையாது என தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சித் தலைவர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Social Buttons