Latest News

April 17, 2015

காஞ்சனா 2.....விமர்சனம்
by admin - 0

 காஞ்சனா 2.....விமர்சனம்
முனி, காஞ்சனா என காமெடி + ஹாரர் படங்களை கொடுத்த ராகவா லாரன்ஸின் அடுத்த படைப்பு தான் காஞ்சனா 2..

லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராஜவேல் ஒளிவீரர் ஒளிப்பதிவு செய்துள்ளார்... 

இந்த படத்தை இயக்கி, தயாரித்து, நடித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். 

கிரீன் டிவி என்ற தொலைகாட்சி ஒன்றில் கேமரா மேனாக பணிபுரிகிறார் ராகவா லாரன்ஸ், அதே டிவியில் ப்ரோகிராம் ட்ரைக்ட்ராக டாப்ஸி. போட்டிகளில் காரணமாக தாங்கள் வேலை செய்யும் தொலைக்காட்சியின் TRP இரண்டாம் இடத்திற்கு வர, இதை முதல் இடத்திற்கு கொண்டு வர டாப்ஸி ஒரு யோசனை சொல்கிறார். பேய் இருக்கா? இல்லையா? கான்செப்ட் தான், ஒரு பாலடைந்த பங்களாவிற்கு இவர்கள் சென்று பேய் சம்மந்தமான ஒரு ப்ரோகிராமை உருவாக்குகிறார்கள், இதில் எதார்த்தமாக டாப்ஸி அந்த இடத்திலிருந்து ஒரு தாலியை எடுக்க, பேய் அவர் மேல் ஏறுகிறது, அதிலிருந்து லாரன்ஸை சிவா சிவா என்று கூப்பிட்டு, அடி பின்னி எடுக்கிறார்.

சில நிமிடங்களிலேயே சிவா என்கின்ற ஆத்மா லாரன்ஸ் உடம்பில் ஏற, அவர் கோவை சரளாவை டார்ச்சர் செய்து நம்மை வயிறு புண்ணாகும் படி சிரிக்க வைக்கிறார். கோவை சரளா, பயந்து ஒரு பாதிரியாரிடன் சொல்ல, வழக்கம் போல் இந்த ஆத்மாக்களை வரவழைத்து, அதன் குறைகளை கேட்க, விரிகிறது ஒரு ப்ளாஷ்பேக். இதில் மொட்டை சிவாவாக லாரன்ஸ், ஊனமாக இருக்கும் நித்யா மேனனை காதலிக்கிறார். இவர்கள் எப்படி இறந்தார்கள், இதற்கு எப்படி பழிவாங்கினார்கள் என்பதே மீதிக்கதை. லாரன்ஸ் படத்தின் இரண்டாம் பாதியில் பேய் புகுந்து செய்வார் பாருங்க ஒரு கலாட்டா, அந்த ஒரு காட்சி போதும் இவரின் நடிப்பிற்கு ஒரு சிவப்பு கம்பளம் வரவேற்கலாம். 

படத்தில் முதல் பாதியில் இருந்த இருந்த விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் இரண்டாம்பாதியில் இல்லை. இதில் வரும் நித்யாமேனனின் ப்ளாஷ்பேக் ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதோடு இரண்டாம்பாதியின் நீளமும் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் போரடிக்கத் துவங்குகிறது.

‘காஞ்சனா’வைவிட இதில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக லாரன்ஸ், டாப்ஸியின் அந்த மெலடிப் பாடல், சதா ‘அலறிக்’ கொண்டேயிருக்கும் படத்தில் ஆறுதல் டச்! ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங், கிராபிக்ஸ் போன்றவற்றிற்கு சவாலான பணிகளைக் கொடுத்திருக்கிறார் லாரன்ஸ். மேக்அப்பும் பலே!

பகலில் துறு துறு, இரவில் வெட வெட என அதே பரபர லாரன்ஸ் இப்படத்திலும். டான்ஸ், ஃபைட், காமெடி, ரொமான்ஸ் என அனைத்து ஏரியாக்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். குறிப்பாக ப்ளாஷ்பேக் ‘மொட்ட சிவா’ கேரக்டர் மாஸ் ரகம்! டாப்ஸியை கிளாமருக்காக மட்டும் பயன்படுத்தாமல், நடிக்கச் செய்யவும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். பேயாக மாறி டாப்ஸி அலறும் காட்சிகளில் ரசிகர்களை உறைந்து போயிருக்கிறார்கள். மாற்றுத்திறனாளியாக வரும் நித்யா மேனன் கொஞ்ச நேரமே வந்தாலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

இப்படத்திலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள் கோவை சரளாவும், ஸ்ரீமனும். ராஜேந்திரன் என்ட்ரிக்கு தியேட்டரே அதிர்ந்தாலும், அதன்பிறகு பெரிதாக எதையும் அவர் செய்யவில்லை. தெலுங்குப்பட வில்லன் ரேஞ்சுக்கு வந்து போகிறார் ஜெயப்பிரகாஷ்.
 காஞ்சனா 2.....விமர்சனம்
 காஞ்சனா 2.....விமர்சனம் 




TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG,VIVASAAYI
www.vivasaayi.com

« PREV
NEXT »

No comments