யாழ்.நகரினில் வைத்து ஊடகவியலாளர்கள் மூவர் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பினில் சமரசம் ஏற்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு காவல்துறை அதிகரித்துள்ளது.எனினும் இதனை அச்சுறுத்தலிற்குள்ளான ஊடகவியலாளர்கள் முற்றாக மறுதலித்துள்ளனர்.எச்சந்தர்ப்பத்திலும் அவ்வாறு தாங்கள் முறைப்பாட்டை மிளப்பெற்றுக்கொள்ள தயாரில்லையெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஊடகவியலாளர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் காவல்துறையினில் செய்யப்பட்ட முறைப்பாடுகளை விலக்கிக்கொள்ள அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது.தொலைபேசி வழியாக அடையாளம் தெரியாத நபர்கள் ஒருபுறம் அச்சுறுத்த மறுபுறம்; மிரட்டல் விடுத்த அதிகாரிகளே சமாதானமாகப்போக அழைப்பும் விடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டஊடகவியலாளர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் உட்பட 4 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்குமாறு யாழ்.நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 12.45 மணியளவில் குறித்த ஊடகவியலாளர் மற்றம் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கலான 4 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.குறித்த சம்பவத்தில் நேற்றிரவு 9.30 மணியளவில் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மேற்படி ஊடகவியலாளர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு, அருகிலுள்ள வீட்டில் வசித்து வரும் யுவதியொருத்தியிடம் தென்னிலங்கையிலிருந்து வந்த நபர் ஒருவர் வீதியில் நின்று பேசிக் கொண்டிருந்ததாகவும் இதன்போது கைதுசெய்யப்பட்டவர்கள்; தலையிட்டதையடுத்து இரு பகுதிக்கும் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை தென்னிலங்கையில் இருந்து வந்த நபர் இலங்கையின் ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவருக்கு நெருங்கிய நபர் என்ற வகையில் அவர் அவசர பொலிஸ் தொடர்பு இலக்கமான 119 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு, விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.அதனடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்..
பின்னர் தாம் கைதுசெய்தவர்களில் ஒருவர் ஊடகவியலாளர் என்பதையும், அவர் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு ஒன்றை முன்னர் செய்தவர் என்ற அடிப்படையிலும் மேற்படி தென்னிலங்கை சிங்கள நபரை அழைத்து இன்றைய தினமே வழங்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் இவர்கள் மீது கொலையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்டதாகவும் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான பணம் களவாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொலிஸார் நடத்திய சோதனையில், அவ்வாறான பணம் இவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து மீட்கப்படவில்லை. இந்நிலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்த தென்னிலங்கையை சேர்ந்த நபர் யாழ்.நீதிமன்றுக்கு வந்திருந்தார்.
எனினும் அவரை நீதிமன்றுக்கு வெளியில் வைத்தே சந்தித்த, பொலிஸார் நீதிமன்றுக்கு வரவேண்டாம் என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களை 27 ம்திகதி வரை விளக்கமறியல் வைக்க உத்தரவை நிதிபதி பிறப்பித்துள்ளார்.
No comments
Post a Comment